Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

டிசம்பர் 25ல் ஏசு பிறந்ததை மறுக்கும் போப் ஆண்டவரின் வாக்கு மூலம்! கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!!

0 comments
கிறிஸ்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் :16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் “டிசம்பர் 25″ என்பது தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை கூறியுள்ளார்.டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றீர்களே!அதற்கு பைபிளில் ஆதாரம் உள்ளதா என கிறித்தவ சகோதரர்களிடத்தில் கேட்டால் பதில் இல்லாமல் இருந்து வந்தது. போப் ஆண்டவரின் விளக்கம் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான “போப்” ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.
இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகம் செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் என்ற இந்த நூல் இதற்கு முன்பு இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் எழுதியுள்ள மூன்றாம் பாகம் என்பது ஏசுவுடைய சிறு வயது முதலான நிகழ்வுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் போப் அவர்கள் ஏசுவின் பிறப்பு குறித்து பேசும்போதுதான் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் தவறு என்றும், அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இயேசுவின் பிறப்பு நிகழ்ந்துள்ளது எனவும் போப்பாண்டவர் அறிவித்துள்ளார்.
நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் காலண்டர் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான டியானிசியஸ் எக்ஸிகுஸ் (Dionysius Exiguus) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் இந்த ஆண்டுக்கணக்கை தவறாக கூறிவிட்டார் என்று போப் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் கூட இயேசுவின் பிறந்த தினம் குறித்து கிறித்தவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அடுத்த அதிர்ச்சித் தகவல் :
உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறிஸ்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.
இது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிடப்படும் தேவதைகள், ஆடு மேய்ப்பவர்களுக்கு இயேசு பிறக்கப் போகிறார் என்று முன்னறிவிப்பு செய்து பாடல் பாடியதாக வரக்கூடிய சம்பவங்களும் பொய் என்றும் அதற்கு எவ்விதமான சான்றுகளும் இல்லை என்றும் போப்பாண்டவர் கூறியுள்ளார்.
மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதும் பொய்யாம்:
அதுமட்டுமல்லாமல் ஏசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாகக் கூறி மாட்டுத்தொழுவம் போன்று கொழு பொம்மைகளை அமைத்து கிறித்தவர்கள் பில்டப் கொடுப்பார்கள். போப் ஆண்டவர் அவர்கள் அது குறித்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார். மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன.
இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.
இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மத்தேயுவுக்கும், லூக்காவுக்கும் முரண்பாடு:
ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மத்தேயு, ஏரோது என்ற மன்னன் இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் ஏசுவின் தாயார் மரியாளும், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பும், குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.
இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
மேற்கண்ட முரண்பாடுகளும் இது குறித்து பைபிளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கட்டுக்கதைகள் தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது “இதுதான் பைபிள்” என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே உள்ள செய்தியில் காண்க!
சூழ்நிலைத் தடுமாற்றம்:
கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.
(மத்தேயு 2:13,14)
இயேசு பிறந்தபோது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும் அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார். ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.
ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.
அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம்தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.
(லூக்கா 2:15-52)
ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.
பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?
லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?
மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?
ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?
அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?
ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?
உண்மையை ஒப்புக்கொண்ட போப்:
போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.
போப் ஆண்டவர் கூறுவது உண்மையாக இருக்குமேயானால், முரண்பட்ட செய்திகளை அவர்கள் கூறியிருக்கக் கூடாது. அவ்வாறு இருவரும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதே அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஒளியை இருளச் செய்துவிடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எதற்குமே ஆதரமில்லை:
கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்மஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.
கிறிஸ்மஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.
இதில் கிறிஸ்மஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

சம்மாந்துறை TJ

சந்திர கிரகணம் தொழுகை

0 comments

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

 சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோஎன்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்க்குச் சென்றார்கள்.
நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான்ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்),அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரதுபிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களைஇவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள்கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம்பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),

நூல்: புகாரி 1059

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவித்தார்: அபூ பக்ரா(ரலி) .

நூல்: புகாரி 1040


சம்மாந்துறை TJ

மன்ஸில் ஓர் ஆய்வு (தொடர் 02)

0 comments
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص  (4 / 458)
 8269 أخبرنا أحمد بن يعقوب الثقفي ثنا يوسف بن يعقوب القاضي ثنا محمد بن أبي بكر المقدمي حدثني عمرو بن علي المقدمي عن أبي جناب عن عبد الله بن عيسى عن عبد الرحمن بن أبي ليلى حدثني أبي بن كعب رضي الله عنه قال : كنت عند النبي صلى الله عليه و سلم فجاء أعرابي فقال : يا نبي الله إن لي أخا و به وجع قال : و ما وجعه ؟ قال : به لمم قال : فأتني به فأتاه به فوضعه بين يديه فعوذه النبي صلى الله عليه و سلم بفاتحة الكتاب و أربع و آيات من آخر سورة البقرة و هاتين الآيتين { و إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم } البقرة و آية الكرسي و آية من آل عمران { شهد الله أنه لا إله إلا هو } و آية من الأعراف { إن ربكم الله الذي خلق السموات و الأرض } و آخر سورة المؤمنين { فتعالى الله الملك الحق } و آية من سورة الجن { و أنه تعالى جد ربنا ما اتخذ صاحبة و لا ولدا } و عشر آيات من أول الصافات و ثلاث آيات من آخر سور الحشر و { قل هو الله أحد } و المعوذتين فقام الرجل كأنه لم يشك شيئا قط
 قد احتج الشيخان رضي الله عنهما برواة هذا الحديث كلهم عن آخرهم غير أبي جناب الكلبي و الحديث محفوظ صحيح و لم يخرجاه
تعليق الذهبي قي التلخيص : الحديث منكر

ஹஜ்ரத் மவ்லானா ஷா முஹம்மது யுசுப் ஸாஹிப் நவ்வரல்லாஹு மர்ஹதஹு அவர்கள் தமது ஹயாத்துஸ் ஸஹாபா என்ற கிதாபின் மூன்றாம் பாகம் 374ம் பக்கத்தில் இமாம் அஹ்மத், ஹாகிம், திர்மிதி ஆகியோரின் அறிவிப்பின் வாயிலாக இம்மன்ஸிலின் சிறப்பை விளக்கியுள்ளார்கள். ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன? என நபியவர்கள் வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச் செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூரா முஃமினீனின் இறுதியில் உள்ள ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குர்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.
நூல் : கன்ஜ், பாகம் - 01 பக்கம் : 112

கன்ஜ் என்ற நூலில் இருப்பதாகப் போடப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், "அபூஜனாப் அல்கல்பீ” என்பவரைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்பாளர்களையும் இமாம் புகாரி, முஸ்லிம் இருவரும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த செய்தி “பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமானதாகும்'' என்று அந்த செய்தியின் கீழே  கூறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் கவனக் குறைவாக நடந்து கொள்பவர், இவரின் இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் தெளிவான முடிவாகும்.

எனவேதான் இவரின் இந்த நூலை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் அவர் ஆதாரப்பூர்வமானது என்று சொன்ன ஏராளமான செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இந்த செய்தியையும் ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இந்த செய்தி மறுக்கப்படவேண்டியது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்த செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக “அபூ ஜனாப்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதன் விவரம் இதோ:

قال ابن سعد كان ضعيفا في الحديث ... وقال علي بن المديني كان يحيى بن سعيد يتكلم فيه وفي أبيه وقال البخاري وأبو حاتم كان يحيى القطان يضعفه ... وقال عمرو بن علي متروك الحديث وقال ابراهيم الجوزجاني يضعف حديثه وقال يعقوب ابن سفيان ضعيف... وقال النسائي ليس بالقوي وقال في موضع آخر ليس بالثقة يدلس... وقال ابن عمار ضعيف  - تهذيب التهذيب - (11 / 177)

இப்னு ஸஅத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள் என்று அலீ பின் அல்மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ கூறியுள்ளார்கள். இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இருட்டடிப்பு செய்பவர் என்று கூறியுள்ளார்கள். இப்னு அம்மார் அவர்களும் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :11, பக்கம் :177)

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்து செயல்படுத்த முடியாது.

ஆனால் பொதுவாக குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு நபியவர்கள் சில சிறப்புக்களை கூறியுள்ளார்கள் அந்த அத்தியாயங்களையும் அதன் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாக அடுத்த இதழில் இருந்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.......

முந்தைய தொடர்கள்.

தொடர் 01 இங்கு க்லிக் செய்யுங்கள்.

சம்மாந்துறை TJ

ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்

0 comments
வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் YouTube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.

Take a Look http://video.onlinepj.com/

பார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்

-வெப்மாஸ்டர்
Photo: வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.

இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.
 
Take a Look  http://video.onlinepj.com
 
பார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்

-வெப்மாஸ்டர்

மன்ஸில் ஓர் ஆய்வு (தொடர் 01)

0 comments

மன்ஸில் என்ற பெயரில் ஓதப்படும் புத்தகத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழில் எழுதி வரும் தொடர் ஆக்கத்தின் முதல் பகுதியை இங்கு வெளியிட்டுள்ளேன். மன்ஸில் என்ற ஒரு புத்தகம் காலா காலமாக முஸ்லீம்கள் மத்தியில் ஓதப்பட்டு வருவதை நாம் அறிவோம். ‘அற்புத நோய் நிவாரணி” என்ற அடை மொழியோடு அச்சிடப்படும் இந்தப் புத்தகம் பொதுவாக தப்லீக் மற்றும் தரீக்காக்களை மார்க்கமாக நினைக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.
 யாராவது இறந்து விட்டால் அவருடைய பெயரால் கத்தம் ஓதுதல் என்ற மார்க்கத்தில் இல்லாத காரியத்தை செய்பவர்கள் இந்த நூலை மரணித்தவரின் பெயரால் அச்சிட்டு வினியோகம் செய்வார்கள். அந்தப் புத்தகத்தின் உள் அட்டையில் இன்னாரின் பெயரால் அவர் மரணித்ததற்காக அவரின் மறுமை மோட்சத்திற்காக இது அச்சிடப்பட்டது என்பதையும் குறிப்பிடுவார்கள்.
அது மட்டுமன்றி பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இதைத் தான் புனித நூலாகக் கருதுகிறார்கள் காரணம் இதில் அடங்கியிருக்கும் சில செய்திகள் – குறிப்பிட்ட அத்தியாயத்தை ஓதினால் அந்த நோய் நீங்கும், வருமை நம்மை விட்டு விலகும் என்றொல்லாம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதினால் தான் இந்தப் புத்தகத்தை மிகவும் புனித நூலாக நமது பெண்கள் நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் மஃரிப் தொழுகைக்குப் பின் மற்றும் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் இந்த மன்ஸில் என்ற புத்தகத்தை ஓதுவார்கள் இறுதியில் அதில் உள்ள 40 ஸலவாத்துக்களை(?) ஓதி முடிப்பார்கள்.
இந்தத் தொடர் மூலமாக மன்ஸில் என்ற இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆராய இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
முன் அட்டையே மூடலாக………………….
மன்ஸில் என்ற இந்தப் புத்தகத்தின் முன் அட்டையையே மூடலாக அமைத்திருப்பார்கள். அதாவது இதன் முன் அட்டையில்……
மன்ஸில் – சூரா யாஸீன், சூரா தபாரக், சூரா வாகிஆ, சூரா ஜும்ஆ, சூரா அர்ரஹ்மான், சூரா நூஹ், சூரா முஜ்ஜம்மில், சூரா ஸஜ்தா, சூரத்துல் கஹ்ப், சூரா துகான், வழீஃபா நபவிய்யா மற்றும் நாற்பது ஸலவாத்தும் அவற்றின் சிறப்புகளும் என்று ஒரு விளம்பரம் போடப்பட்டிருக்கும்.
இந்த வாசகத்தை பார்த்தவுடன் ஏதோ அற்புத நோய் நிவாரணி போல்தான் உள்ளது என்று மக்கள் எண்ணத்தலைப்பட்டு இந்த புத்தகத்தை வாங்குகிறார்கள்.
உண்மையில் இதில் உள்ள தகவல்களை நாம் ஆய்வு செய்து பார்க்கின்ற நேரத்தில் குர்ஆன் அத்தியாயங்களை குறிப்பிட்டு அவைகளுக்கு நபியவர்களோ, அல்லாஹ்வோ சொல்லித் தராத சிறப்புகளையெல்லாம் இருப்பதாக வெரும் கப்ஸாக்களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
ஷைகுல் ஹதீஸின் ஹதீஸ் கலை ஞானம்(?)
இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர் பெயரைக் குறிப்பிடும் போது “ஷைகுல் ஹதீஸ் குத்புல் அக்தாப், மவ்லானா முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத்” என்று பெருத்த அடைமொழியோடு குறிப்பிட்டிருப்பார்கள். பெரியதொரு ஹதீஸ் கலை விற்பன்னராக இவரைக் காட்ட முனைவார்கள்.
இவர்தான் தப்லீக் ஜமாத்தினர் போற்றிப் புகழும் தஃலீம் என்ற புத்தகத்தையும் தொகுத்தவர். அந்தப் புத்தகத்தையும், மன்ஸில் என்ற இந்தப் புத்தகத்தையும் படிப்பவர்கள் இவரின் ஹதீஸ் கலை ஞானத்தை(?) நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
அதிகமான இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமாக செய்திகளைக் கொண்டுதான் இவர் தனது புத்தகங்களை தூபமிட்டிருக்கிறார். இவருக்கும் ஹதீஸ் கலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் போது இவருக்கு ஏன் இந்த “ஷைகுல் ஹதீஸ் குத்புல் அக்தாப்” அடை மொழி?
இப்போது புத்தகத்தின் உள்ளே உள்ள கருத்துக்களை வரிக்கு வரி ஆராய்வோம்.
புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஒரு திருமறை வசனத்தைக் குறிப்பிட்டு புத்தகம் ஆரம்பிக்கப்படுகிறது. (பல காலமாக அச்சிடப்பட்டு வரும் இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்புகளில் தான் இந்த வசனம் அச்சிடப்படுகிறது. இதற்கு முன்பு இப்படி அச்சிடப்படவில்லை).
(விசுவாசிகளே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும், மெதுவான குரலிலும் உங்கள் இரட்சகனிடமே (உங்கள் தேவையைக் கோரிப்) பிரார்தியுங்கள்.
(அல் குர்ஆன் 7-55)
மன்ஸிலை புனித நூலாக நினைக்கும் கூட்டத்தார் தொழுகை முடிந்ததும் கூட்டு துஆ என்றொன்றை ஓதுவார்கள் அது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியமாகும். ஆனால் பிரார்த்தனை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்யும் போதும் இந்த வசனத்தைத் தான் ஆதாரம் காட்டுவோம். இறைவனை தாழ்மையாகவும் அமைதியாகவும் பிரார்த்திக்க வேண்டும். என்பதும் கூட்டு துஆ போன்றவைகள் வழிகேடுகள் என்பதற்கும் மேற்கண்ட வசனமே போதிய ஆதாரமாகும்.
மேற்கண்ட திருமறை வசனத்திற்கு அடுத்ததாக “மன்ஜில் ஓதவதின் பலன்கள்” என்ற ஒரு தலைப்பிடப்பட்டு இந்த புத்தகத்தை ஓதுவதினால் என்ன நன்மை ஏற்படும் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள். அதைப் பற்றிய விபரத்தை பார்ப்போம்.
மன்ஜில் ஓதுவதின் பலன்கள்(?).
இந்த மன்ஜில் கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், விலங்குகள், திருடர்கள் பயம், தீராத உடல் மற்றும் மன வியாதி, மனக் குழப்பம், திடுக்கம் மற்றும் எல்லா முஸீபத்துகளில் இருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற ஹஜ்ரத் ஷைகுல் ஹதீஸ் முஹம்மது ஜக்கரிய்யா ஸாஹிப் அவர்களும், அவருடைய குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்ட அருமருந்தாகவும், அற்புத நோய் நிவாரணியாகவும், அனுபவப்புர்வமான அமலாகவும் இருக்கிறது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி மன ஓர்மையுடன்  அன்றாடம் ஓதி வருவதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு அளப்பரிய நன்மைகள் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
மேற்கண்ட விளக்கம்? மன்ஸிலின் முதல் பக்கத்திலேயே அடங்கியிருக்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விடயம் என்னவென்றால் மன்ஜில் என்ற இந்த நூலில் அடங்கியுள்ள செய்திகள் மூலம் மேற்கண்ட பயன்கள் கிடைக்கும் என்று திருமறைக் குர்ஆனோ நபியவர்களின் வழிகாட்டுதல்களோ எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.
ஜக்கரிய்யா ஸாஹிப் என்பவரும் அவருடைய குடும்பப் பெரியார்களும் அமல் செய்து பலன் கண்டதாகத் தான் மேற்கண்ட செய்தி சொல்கிறதே தவிர நபியவர்கள் செய்ததாகவோ அல்லது செய்யச் சொன்னதாகவோ எங்கும் இல்லை.
இந்த ஒரு அடிப்படையே மன்ஸிலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதற்கான போதுமான சான்றாகும்.
குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்ளை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்..
(திருக்குர்ஆன் : 20:122, 123, 124)
‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (திருக்குர்ஆன் : 2:170)
(முஹம்மதே!) உமது இறை வனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (திருக்குர்ஆன் : 6:106)
தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்? அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் ‘இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது’ என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந் துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை. அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் : 6:114,115)
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (திருக்குர்ஆன் : 7:3)
மேற்கண்ட வசனங்கள் குர்ஆன் மற்றும் நபியவர்களின் சுன்னாவை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன. அப்படியிருக்கையில் ஜக்கரிய்யா ஸாஹிபும் அவருடைய குடும்பப் பெரியார்களும் ஓதியதாக வரும் இந்த மன்ஸிலை நாம் ஓத வேண்டிய எந்தத் தேவையும் நமக்கு கிடையாது.
அத்துடன் மன்ஸிலில் உள்ளவற்றை ஜக்கரிய்யா ஸாஹிப் சொல்வதைப் போல் ஓதி வரவேண்டும் என்றால் அந்த நல்ல நடை முறையை நபியவர்களே நமக்குக் காட்டித் தந்திருப்பார்கள். நபியவர்கள் காட்டித் தரவில்லை என்றிருக்கும் போது இஸ்லாத்திற்கும் மன்ஸில் என்று கூறி தாங்களாக மார்க்கத்தில் இல்லாத சிறப்புகளை சேர்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
பொதுவாக திருமறைக் குர்ஆனில் உள்ள அத்தியாயங்களை எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஓதிக்கொள்ள முடியும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
“யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம்’ என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து”என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதீ (2835)
மேற்கண்ட நபியவர்களின் வார்த்தையின்படி திருமறைக் குர்ஆனை நன்மையை நாடி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் ஓத முடியும், ஆனால் திருமறையின் அத்தியாயங்களுக்கு நபியவர்களோ அல்லாஹ்வோ சொல்லித்தராத சிறப்புகளை நாமாக உருவாக்கக் கூடாது.
மன்ஸிலின் சிறப்பு பற்றிய ஹதீஸின் தரத்தைப் பற்றி அடுத்த தொடரில் ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்…..

சம்மாந்துறை TJ

பெருநாள் தொழுகை

0 comments

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612
பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986
தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426
முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616
பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610
மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

சம்மாந்துறை TJ

ஆண் பெண் ஹஜ் செய்முறை விளக்கம் மற்றும் ஹஜ் பற்றிய முழு விபரம் வீடியோவுடன்!

0 comments

SLTJ யின் பெரு நாள் தொழுகை நடைபெறும் இடங்களும் உரை நிகழ்த்துபவர்களும்

0 comments


SLTJ தலைமையகம் (கொழும்பு) சகோ :  அப்துர் ராஸிக்
SLTJ மாபோலைக் கிளை                 சகோ :   ரியாஸ்  MISC
SLTJ சிலாபம் கிளை                          சகோ :  ஸப்வான்  DISC
SLTJ ஹோராப்பொல கிளை          சகோ :  நவாஸ் மௌலவி
SLTJ பரகஹதெனிய கிளை           சகோ :  ஹபீழ் ஸலபி
SLTJ எதுன்கஹகொடுவ கிளை   சகோ :  பாயிஸ்  அமீனி
SLTJ ஹெம்மாதகம கிளை            சகோ :  ஜவாஹிர் ஜமாளி
SLTJ மாணிக்கம்பிடி கிளை           சகோ :  அஜ்மீர் அமீனி
SLTJ அக்குரனை கிளை                  சகோ :  ஹனீஸ் ஸஹ்வி
SLTJ கல்பிடி கிளை                         சகோ :  பர்ஸான் அ.ஆசிரியர்
SLTJ நேகம கிளை                            சகோ :  இஹ்திஸாம்
SLTJ மங்கொன கிளை                   சகோ : ரிழ்வான் MISC
SLTJ காத்தான்குடி கிளை           சகோ :  கபீர்  DISC
SLTJ கல்முனை கிளை                 சகோ : நிக்ராஸ்  DISC
SLTJ பண்டாரவெல கிளை           சகோ :  நப்லி  DISC
SLTJ வட்டதெனிய கிளை           சகோ :  பஸீஹ்  MISC
SLTJ சம்மாந்துரை கிளை           சகோ :  பாயிஸ் (ஆசிரியர்)
SLTJ கலாவெவ கிளை                சகோ :  ரஸ்மின் MISC
SLTJ புழுதிவயல் கிளை              சகோ  பர்ளீன்  MISC
SLTJ கம்பளை கிளை                   சகோ  ஹிஷாம்  MISC
SLTJ தெஹியங்க கிளை            சகோ.  அஸ்ஹர் ஹாமி
SLTJ மள்வான கிளை                  சகோ. முஆத்  MISC
SLTJ கிண்ணியா கிளை               சகோ நிஆம்  MIS 

சம்மாந்துறை TJ

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

0 comments

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

சம்மாந்துறை TJ

மாநில தலைமையின் முக்கிய அறிவிப்பு..

0 comments

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சம்மாந்துறை TJ

இன்றைய ஜும்மா உரை Jumma 2012/10/05

0 comments

இன்றைய ஜும்மா நேரடி ஒளிபாரப்பு

0 comments
இன்ஷா அல்லாஹ் இன்று SLTJ STR இல் இடம்பெறும் இன்றைய ஜும்மா நேரடி ஒளிபாரப்பு நமது இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இன்ஷா அல்லாஹ்!

உரை: சகோ : கபீர் DISC

உத்தியோகபூர்வ ஒளிபரப்பு


சம்மாந்துறை TJ

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி

0 comments

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.
ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத்தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.
மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு ரூபாய் 9,000 முதல் 10,000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 10,500 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் ரூபாய் 10,500 அனுப்பி வைக்குமாறும், ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1500 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து ரூபாய் 7000 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 7000 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விலையாவும் உத்தேசமானது தான். நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்றவரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும். அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும்.
உங்களால் அனுப்பப்ட்ட ரூபாய் 10,500 விலையில் மாடு கிடைக்காமல் 9500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும் தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

சம்மாந்துறை TJ

குர்பானியின் சட்டங்கள்

0 comments

camel

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)
முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர் அலீ (ரலி)
நுல் புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகள்
ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)
நாமே அறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.