Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

சம்மாந்துறையில் எதிர்ப்புகளையும் தாண்டி தொடரும் பிரச்சாரங்கள்

0 comments
 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக ஏகத்துவா கொள்கை விளக்க நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றனர். இதற்கிடையின் அசத்தியவாதிகளின் எதிர்ப்புகளும் பலவிதமான முறைகளில் தொடர்கிறது. அல்லாஹ்வின் உதவியால் அனைத்தையும் முறியடித்து பிரச்சாரப் பணியை தொடர்ந்தும் சிறப்பாக செய்து வருகின்றனர். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
கடந்த 28.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை நூர்தீன் வீதி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோதரர் நfப்லி Disc அவர்கள் ‘இஸ்லாமும் நமது சமூகமும்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியையும் தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி  சில அசத்திய கும்பல் தடுக்க முயற்ச்சித்த போதும் இறைவனின் உதவியால் அது முறியடிக்கப்பட்டது. மேலும் அங்கு கூடி இருந்த சில வாலிபர்கள் தூய  தவ்ஹீத் கொள்கையில் இணைவதாகவும் உறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…!
sammanthurai therumunaismtr therumunai
சம்மாந்துறை TJ

SLTJ சம்மாந்துறை கிளையில் இஸ்லாம் ஓர் எளியமார்க்கம்

0 comments
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ கேள்வி பதில் நிகழ்ச்சி 25.01.2013 ம் திகதி பி.ப. 7.00 மணிக்கு SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் ரசான் DISc மற்றும் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார்கள். இதில் பல சகோதர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
23392_400860183329636_1388686921_nPhoto1194Photo1195Photo1197Photo1203Photo1207

சம்மாந்துறை TJ

அடக்கவந்த தப்லீக் வாதிகளும்...! ஆட்டம் கண்ட அரசியல் வாதியும்....! ஓட்டம்...

0 comments

அன்புச்சகோதரர்களே.... SRILANKA THOWHEED JAMAATH SAMMANTHURAI கிளை ஏற்பாட்டில் சம்மந்துரையின் பல்வேறு இடங்களில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


இதை தாங்கிக்கொள்ள முடியாத அசத்திய வாதிகள் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சில சகோதரர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை 23.01.13 அன்று சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தை சில அரசியல் விசமிகளோடு (சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ரியால்) வருகைதந்து தடுக்க முயன்றனர். அவர்களது அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் நாம் இறைவனது மார்க்கத்தை எடுத்துச்சொல்லுவோம் என்ற உறுதிப்பாட்டோடு தொடர்ந்து நமது பிரச்சாரத்தை இறைவன் உதவியோடு வெற்றிகரமாக செய்து முடித்தோம். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

அங்கு ஏற்பட்ட தகராறின் போது நாம் அவர்களிடம் இவ்வளவு நேரமாக பேசின பேச்சில் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான ஒரு தகவல் இருந்தால் நிரூபித்துக்காட்டுங்கள், கூட்டத்தை முடித்துக்கொண்டு செல்கிறோம் என்றும் நாம் செய்கின்ற காரியம் தவறு என்றால் உங்களில் ஒருவர் நம்முடைய ஒருவருடன் பேசுவதற்கு தயாரா? அவர் ஆலிமாக இருக்கலாம் அல்ஆலிமாக இருக்கலாம் யாராக இருந்தாலும் நமது ஜமாஅத் சம்மாந்துறை கிளை செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் ஆசிரியர் (அவர் மௌலவி அல்ல) அவருடன் பேச முன்வாருங்கள் என்று அன்பாக அழைத்தும் திராணியற்று சத்தியத்திற்கு முன் மண்டியிட்டது அந்த கும்பல் அதில் ஆலிம் களும் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

எமது சகோதர்கள் ஒழுக்கத்தோடு நடந்து கொண்டதையும், அவர்கள் ஒழுக்கமில்லாமல் நடந்ததையும் உங்களுக்கு பார்க்கலாம்.

சம்மாந்துறை TJ

தமிழகத்தில் விஸ்வரூபம் தடை நீக்கப்படவில்லை – வதந்திகளை நம்பாதீர்

0 comments
தமிழக அரசு விஸ்ரூபம் படத்திற்கு இட்ட தடையை நீக்கியதாக இலங்கையின் பல செய்தித் தளங்கள் நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தன. உண்மையிலே மனிஷ் திவாரியின் கருத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த பதிலடி என்ன? அங்கு என்ன நடந்தது? என்பதை அறியாமல் இப்படி கருத்து தெரிவிப்பது மடமையாகும்.
நடந்தது என்ன?Manish-tiwariவிஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தவுடன் அதை எதிர்த்து கமல் இன்று (24-1-2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு மதியத்திற்கு பிறகு விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாட்சா மற்றும் நீதிபதி சாந்த குமார் நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய பென்ச் படத்தை தற்போது அனுமதிக் முடியாது எனக் கூறி வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் “படத்தை பார்த்த பின்னர் தான் முடிவு எடுக்க முடியும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 26 ஆம் தேதி படத்தை பார்க்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.
“தனிக்கை துறை அனுமதி அளித்த பின்னர் படத்தை தடை செய்வது சட்டப்படி குற்றம்” என்பது கமல் மற்றும் இன்னும் சிலரின் வாதம்.
ஆனால் அதை நிராகரிக்கும் வன்னம் தற்போது நிதிபதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
தனிக்கை துறை அனுமதி அளித்துள்ளது என்றாலும்,  படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கூறியுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளே படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ள நிலையில்,   நமது நாட்டின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சாரக உள்ள மனிஸ் திவாரி “தனிக்கை துறை அனுமதி அளித்த பிறகு சாதாரணமாக எந்த படத்தையும் தடை செய்து விடக்கூடாது” என்ற கருத்தில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
சம்மாந்துறை TJ

மீலாதுன் நபி விழா மார்க்கம் அனுமதித்த ஒன்றல்ல

0 comments
மீலாதுன் நபி,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளது.ரபீஅல் அவ்வல் மாதம் 12 ஆம் தேதி அன்று தான் நபிகள் நாயகம் பிறந்தார்கள் எனவும் , ரசூலுல்லா பிறந்த நாளை கொண்டாடுவது சிறப்பிற்குரிய காரியம் என்ற வகையில் இந்த மீலாது விழா கொண்டாடப் படுகிறது. மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும்,மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் மக்கள் கூறுகின்றனர்.இந்த மீலாது விழா இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு நாம் நடுநிலையோடு அணுகுவதே சிறந்ததாகும்.மீலாது விழா கொண்டாட்டத்தில் உள்ள காரியங்கள் அனைத்தும் குர்ஆன் ஹதீஸுக்கு முரன்படுகிறதா இல்லையா என்று பார்த்தோமேயானால் இதற்க்கு ஒரு தெளிவான ஒரு விடை கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாள் எப்பொழுது?
மீலாது விழா கொண்டாடக் கூடியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரபீஅல் அவ்வல் மாதம் 12 தேதி பிறந்தார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த விழா கொண்டாடப் படுகிறது.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தேதியில் தான் பிறந்தார்கள் என்று எந்த ஹதீஸ் நூலிலும் , வரலாற்று புத்தகத்திலும் பதிவு செய்யப் படவில்லை.நபிகள் நாயகம் தன்னை நபி என்று உலகுக்கு அறிமுகப் படுதியப் பிறகுதான் அவர்களை மக்கள் கவனிக்கத் தொடங்கினார்களே தவிர அவர்களுடைய முந்தய காலத்தை எவரும் பதிவு செய்யவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) என்று பிறந்தார்கள் என்றே தெரியவில்லை என்று சொன்னால் எப்படி பிறந்தநாள் கொண்டாடுவது?
இஸ்லாத்தின் அடிப்படை
ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தை மார்க்கம் என்று செய்தானேயானால் அது அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதரோ அந்த காரியத்தை கூறியிருக்க வேண்டும் அல்லது  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்து காட்டி இருக்க வேண்டும் அல்லது அனுமதியாவது அளித்திருக்க வேண்டும்.இதை கீழ் காணும் நபிமொழிகள் நிருபிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)
இஸ்லாத்தின் அடிப்படை இப்படி அமைந்திருக்க , இந்த மீலாது நபி என்ற ஒரு விழாவை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் எங்காவது கூறி இருக்கிறானா என்று தேடி பார்த்தல் அப்படி ஒரு வார்த்தை கூட தென்படவில்லை.அல்லாஹ் சொல்லவில்லை என்றாலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களாவது இந்த விழாவை பற்றி கூறியிருப்பார்கள் என்று பார்த்தல் , நபிகள் நாயகம்(ஸல்)  அவர்கள் தனக்கு பிறந்த நாள் கொண்டாட சொன்னதும் இல்லை அவர் யாருடைய பிறந்தநாளையும் கொண்டாடவும் இல்லை.மேற்கூறிய ஆதாரங்களை வைத்து பார்கும் போது இந்த விழா நபிகள் நாயகத்திற்கு பிறகு ஏற்படுத்தப் பட்டது என்பதை நீங்கள் உணரலாம். ”பாத்திமத்” என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் தான் இந்த “மீலாது விழாவை இஸ்லாத்தில் புகுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாறு.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப் படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம்.
பிறந்தநாள் கொண்டாடலாமா?
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)
மேல்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடுவது நபிகள் நாயகம் அவர்களின் சொல்லுக்கு முரணாக அமைகின்றது.
நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?
இந்த மீலாது விழாவை ஆதரிக்கக் கூடியவர்கள் , இந்த ஒரு செயல் ரசூளுல்லாவிர்க்கு பின்னால் ஏற்படுத்தப் பட்டது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால் அவர்கள் எடுத்து வைக்கக் கூடிய வாதம் , ரசூளுல்லாவை புகழ்வது தவறா ?
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ஷபாஅத்’ எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.
அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.
இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
”ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.(நூல்: அஹ்மத் 12093, 13041)
”கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!(நூல்: புகாரி 3445)
நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.
இவர்கள் மவ்லிது எனும் பாடல் வரிகளை வைத்தே அல்லாஹ்வின் தூதரை புகழ்வதாக கூறுகிறார்கள்.அந்த மவ்லிது வரிகள் நிச்சயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வதாகவே அமைந்திருக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை,அவர்களின் ஒழுக்கம்,தூய்மையான அரசியல்,சிறந்த இல்லறம்,வணக்க வழிபாடு,அவர்களின் அருங்குணங்கள்,அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை,அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,
பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!

சம்மாந்துறை TJ

இஸ்லாமும் நமது சமூகமும் – சம்மாந்துறை தெருமுனைப் பிரச்சாரம்

0 comments
 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 21.01.2013 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறைவண்டு வாய்க்கால் சந்திக்கு அருகிலும் 22.01.2013 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை வண்டு அல் மாபாச பாடசாலைக்கு அருகிலும் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இவற்றில் சகோதரர் ரஸான் Disc அவர்கள் ‘இஸ்லாமும் நமது சமூகமும்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பலர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
Photo11531
Photo1155
சம்மாந்துறை TJ

அடக்கவந்த தப்லீக் வாதிகளும் ஆட்டம் கண்ட அரசியல் வாதியும்....!

0 comments
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்யின் தெருமுனை பிரச்சாரம் சம்மாந்துறை சென்னால் கிராமம் பகுதியில் 2013.01.23 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சகோதரர் ரசான் DISc அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது சில தப்லீக் சகோதரர்கள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ரியால் என்பவருடன் வந்து இந்த பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது உடனடியாக பிரச்சாரத்தை நிறுத்துமாறும் அனாகரியமான முறையில் நடந்து கொண்டதுடன் கைகலப்புக்கும் தயாரானார்கள் எனினும் நமது சகோதர்கள் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடாமல் ஜமாஅத் சார்பாக பேசுவதற்க்கு ஒருவரை நியமித்து அவர்கள் சார்பாக ஒருவரை பேச அழைத்த போது பேசுவதற்க்கு  வர மறுத்தனர் இதனை புரிந்து கொண்ட அப்பிரதேச மக்கள் அசத்திய வாதிகளை இனங்கண்டு அந்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதுடன் பிரச்சாரத்தை தொடருமாறும் கோரிக்கை விடுத்தனர் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற்றது.

பின்னர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ஜமாஅத்யின் அறிமுகம் மற்றும் அதன் பணிகள் பற்றி தெளிவுரை வழங்கினார் எனினும் இதனை சகித்துக்கொள்ள முடியாத அசத்தியவாதிகள் போலீசாரை வரவழைத்தனர்.

போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்துக்கு வந்து பார்த்த போது பிரச்சாரம் எந்தவிதத்திலும் பாதைகளுக்கோ பொதுமக்களுக்கோ இடையூறின்றி இடம்
பெருவதை அவதானித்தா அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது என்று அசத்தியவாதிகளுடன் கூறிவிட்டு சென்றனர்.

10 மணி அளவில் முடிவுற இருந்த பிரச்சாரம் 11 மணி அளவில் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
வீடியோ மற்றும் மேலதிக புகைப்படங்கள் விரைவில் இன்ஷாஅல்லாஹ்...
சம்மாந்துறை TJ

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!

0 comments
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!
தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!
சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.
இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.
சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.
உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி!
சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.

சம்மாந்துறை TJ

விஸ்வரூபம் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடம் டிஎன்டிஜே நேரில் வலியுறுத்தல்!

0 comments
முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதை தடைசெய்யக்கோரி இன்று டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுமேயானால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதையும் உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடத்தில் 1மணிநேரத்திற்கும் மேலாக விளக்கி கூறப்பட்டது.
உள்துறைச் செயலாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கீழ்க்கண்ட மனு கொடுக்கப்பட்டது

தடை செய்யப்படவில்லை எனில் 25-1-2013 அன்று அனைத்து திரையரங்கு முன்பும் தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகைப் போராட்டம் நடத்த கமிஷனரிடம் அனுமதி கேட்டு வழங்கப்பட்ட கடிதம்:



சம்மாந்துறை TJ

விஸ்பரூபம் திரைப்பட வெளியீட்டை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மா பெரும் முற்றுகைப் போராட்டம்

0 comments
முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் விதமாய் கமலஹாஸன் நடிப்பில் வெளிவரும் விஸ்பரூபம் திரைப்படம் கொழும்பின் “சினிசிட்டி” திரை அரங்கில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (25-01-2013) வெளியிடப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அத்திரைப்பட அரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவதென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்துள்ளது. எதிர்வரும் வெள்ளி ஜூம்ஆ தொழுகையை அடுத்து, மருதானை சினிசிட்டி திரையரங்கை நோக்கி இம்முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ்! அனைத்து முஸ்லிம்களும் அலை கடலென திரண்டு வந்து தம் எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு வாஞ்சையுடன் கேட்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

சம்மாந்துறை TJ

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து 21.01.2013ம் திகதி தமிழ்நாட்டில்  அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இலங்கை அரசாங்கம்  இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படத்தை இலங்கையில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது.

இப்படிக்கு
ஆர்.அப்துர் ராஸிக்
 செயலாளர்
(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)

சம்மாந்துறை TJ

சம்மாந்துறையில் தொடரும் தெருமுனைப் பிரச்சாரம்

0 comments
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 20.01.2013 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சின்னப்பள்ளிக்கு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் கபீர் DISc அவர்கள் ‘தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். கொட்டும் மழையிலும் பல சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
1 2 3

சம்மாந்துறை TJ

தவ்ஹீத் கொள்கை விளக்கம் – சம்மாந்துறையில் தெருமுனைப் பிரச்சாரம்

0 comments
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 19.01.2013 சனிக் கிழமை அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சலாம் பள்ளிக்கு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் கபீர் Disc அவர்கள் ‘தவ்ஹீத் கொள்கை விளக்கம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!Photo1118

சம்மாந்துறை TJ

சம்மாந்துறையில் தெருமுனைப் பிரச்சாரம்

0 comments
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 18.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை அல்-அர்சத் பாடசாலைக்கு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோதரர் ஹபீழ் ஸலபி அவர்கள் ‘தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…!

சம்மாந்துறை TJ

தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?- சம்மாந்துறையில் தெருமுணைப் பிரச்சாரம்

0 comments
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 11.01.2013 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை புஷ்ரா பள்ளி அருகில் தெருமுணை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் ஹிஷாம் MISc அவர்கள் 
'தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும்  பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

சம்மாந்துறை TJ