Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

ஷவ்வால் மாதத்திற்கு இரண்டு தலைப் பிறையா? ஜ. உலமாவின் புதிய பத்வா(?)

0 comments

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!’ என்று அவர்களிடம் கூறப்படும் போது ‘நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே’ எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள். (2:11,12)
கடந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கப்பட்டது தொடர்பில் சில நாட்களாகவே பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது.
இதில் கடந்த 08 ம் தேதி இலங்கையின் கிண்ணியாவில் பிறை தென்பட்டதை அடிப்படையாக வைத்து கடந்த வியாழக்கிழமை (08.08.2013) அன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் பிறை பார்க்கும் மாநாட்டை கொழும்பு பெரிய பள்ளியில் கூட்டிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினரோ கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்க முடியாது என்று கூறி வியாழக்கிழமை நோன்பு நோற்குமாறும் வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடுமாறும் பொதுமக்களுக்கு வானொலி வாயிலாக அறிவித்தல் விடுத்தது.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிறை பார்க்கப்பட்ட ஊரான கிண்ணியா வாழ் மக்களும், கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமாவும் வியாழக்கிழமையே புனித நோன்புப் பெருநாளை கொண்டாடினார்கள்.
இதன் பின்னர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பிறை தொடர்பாக ஓர் உரையாற்றினார்.
அந்த உரையில் அன்று…
பிறை கிண்ணியாவில் தென்பட்டது என்பது பொய்.
கிண்ணியாவில் பிறை கண்டதாக நம்பி நோன்பை விட்டவர்கள் இப்போதே அதனை மீண்டும் பிடித்துக் கொள்ளுங்கள்.
கிண்ணியா பிறையை நம்பி நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியவர்கள் அல்லாஹ்விடம் இப்போதே தவ்பா செய்து கொள்ளுங்கள்.
வானியல் அடிப்படையில் இன்று (08 ம் தேதி) பிறை தென்பட வாய்ப்பே இல்லை. ஆகவே இன்று பிறை தென்பட்டதாக சொல்லும் தகவலை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இன்று (08 ம் தேதி) பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுமார் 18 வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே கிண்ணியாவில் தென்பட்டதாக சொல்லப்படும் பிறையை ஏற்றுக் கொள்ள முடியாது.
வெள்ளிக்கிழமை தான் பெருநாள் கொண்டாட வேண்டும்.
என்றெல்லாம் குறித்த தனது உரையில் உரத்த குரலில் கோபப்பட்டு பேசியதை நாட்டு மக்கள் நன்கறிவர்.
ஆனால் இன்று…..
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கும், கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கும் இடையில் ஏற்பட்ட பிறை பிரச்சினை தொடர்பான ஒரு மஷுரா கொழும்பில் நடத்தப்பட்டது.
அந்த மஷுராவின் பின்னர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை ஷவ்வால் மாத பிறை தொடர்பான தனது இறுதி முடிவை வெளியிட்டுள்ளது.
அதில்…
கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது உறுதிபடக் கூறப்பட்டது.
பிறை காணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர்அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மிய்யதுல் உலமாவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் ஸ்கிரீ்ன ஷாட்.
இந்த தீர்மானத்தினைப் பார்க்கும் போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்பதை நாம் அறியக் கிடைக்கின்றது.
ஜம்மிய்யதுல் உலமா சபை பிறை விஷயத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்துடன் எப்படியெல்லாம் விளையாடியுள்ளது என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
வியாழன் பெருநாள் கொண்டாடியதும் சரி, வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரிதான்.
17.08.2013 அன்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையும், கிண்ணியா உலமா சபையினரும் சேர்ந்து எடுத்த தீர்மானத்தின்படி வியாழன் பெருநாள் கொண்டாடிதும் சரி, வெள்ளிக்கிழமை பெருநாள்கொண்டாடியதும் சரி என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த முடிவு தெளிவாக வேண்டுமென்று தங்கள் பிழையை மறைத்துக் கொள்வதற்காக பிழையை ஒத்துக் கொள்ள முடியாமல் எடுத்த முடிவாகும்.
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
08 ம் தேதி பிறை தென்படவில்லை. தென்பட்டதாக சொல்லப்படும் செய்தியும் பரப்பப்படும் செய்திகளும் பொய்யானவை. பிறை பார்த்த தகவலை ஏற்றுக் கொண்டு வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும் கிண்ணியாவில் பிறை தென்படவில்லை என்றும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பிறை பற்றி வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அடித்துக் கூறினார்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
08 ம் தேதி பிறை பார்க்கப்பட்டது உண்மை. அதனடிப்படையில் பெருநாள் கொண்டாடியது சரியானது. (அவர்கள் யாரும் தவ்பா செய்ய தேவையில்லை).
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
இன்று பிறை தென்பட வாய்ப்பே இல்லை என்று 18 வானியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். வெரும் 14 நிமிடங்கள் மாத்திரம் தான் பிறை தெரியும். அப்படியிருக்க கிண்ணியாவில் பிறை பார்த்ததாக சொல்லப்படும் செய்தி பொய்யானதாகும் பிறை பார்க்க வாய்ப்பே இல்லை. ஆகவே அந்தப் பிறையை நம்பி நோன்பை விட்டவர்கள் இப்போதே நோன்பை பிடித்துக் கொள்ளுங்கள்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
கிண்ணியாவில் பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட தகவல் உறுதியானது அதனடிப்படையில் பெருநாள் கொண்டாடியவர்கள் சரியாகவே செய்தார்கள். (அப்படியானால் வியாழக்கிழமை நோன்பை விட்டவர்கள் மீட்டிப் பிடிக்கத் தேவையில்லை)
08 ம் தேதி வியாழக்கிழமை. (ரிஸ்வி முப்தியின் உரையில்)
இன்று பிறை தென்பட வாய்ப்பே இல்லை என்று 18 வானியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
17 ம் தேதி சனிக்கிழமை. (ஜம்மிய்யதுல் உலமாவின் முடிவு)
கிண்ணியாவில் பிறை தென்பட்ட செய்தி உண்மையானது. அப்படியானால் 18 வானியலாளர்கள் பொய் சொல்லியுள்ளார்கள். இனிமேலும் இந்த 18 வானியலாளர்களையும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நம்பக்கூடாது.
குறிப்பாக ஜம்மிய்யதுல் உலமாவை காப்பாற்ற பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிய “ஆகில் அஹ்மதை” உலமா சபை 17 ம் தேதி கூட்ட முடிவின் மூலம் பொய்யர் என்று ஒத்துக் கொண்டுவிட்டது.
இரண்டில் எது சரியானது? உண்மையானது?
கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013. ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது.
பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர்எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை பெருநாள் எடுத்தவர்களை வழிகேடர்கள் தவ்பா செய்ய வேண்டும் என்றெல்லாம் ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அன்று தவ்பா செய்யச் சொன்னவர்கள் இன்று தவ்பா தேவையில்லை. கிண்ணியாவில் பிறை காணப்பட்ட செய்தி உண்மைதான் என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இது எப்படி சாத்தியமாகும்?
ஷவ்வால் மாதத்திற்கு இரண்டு தலைப் பிறைகளா?
வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி. வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தற்போது அறிவித்துள்ளது. இது தவறான செய்தியாகும்.
காரணம் இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.
ஏன் என்றால் எந்தவொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான் எந்த மாதத்திற்கும் இரண்டு தலைப்பிறைகள் கிடையவே கிடையாது.
கடந்த 08 ம் தேதி பிறை பார்த்தவர்கள் அதனடிப்படையில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடினார்கள். இது சரியானது என்று ஜம்மிய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. இது சரியென்றால் ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08ம் தேதி ஆரம்பிக்கும் ஆகவே அதுதான் தலைப் பிறை.
ஆனால் 09 ம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரிதான் என்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. 09 ம் தேதி பெருநாள் கொண்டாடியது சரியென்றால் 09 ம் தேதி தான் ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை ஆரம்பிக்கும். ஆகவே அதுதான் தலைப் பிறையாக இருக்க வேண்டும்.
ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா? அல்லது 09 ம் தேதியா?
இப்போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை தெளிவாக ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை எதுவென்பதை குறிப்பிட வேண்டும். கிண்ணியா உலமா சபையை திருப்திப்படுத்துவதற்காக இரண்டும் சரியென்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள்.
அல்லாஹ்வின் மார்க்க அடிப்படையில் எந்த நாளை ஷவ்வால் தலைப் பிறையாக ஏற்கப் போகின்றார்கள்?
08 ம் தேதி வியாழக்கிழமை தலைப் பிறை ஆரம்பிக்கின்றதா? அல்லது 09ம் தேதி வெள்ளிக்கிழமை தலைப் பிறை ஆரம்பிக்கின்றதா?
இந்தக் கேள்விக்கு அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பதில் சொல்லியே தீரவேண்டும்.
மார்கத்தில் விளையாடும் ஆலிம்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடி தலைப் பிறை தங்கள் தீர்மாணத்தின் அடிப்படையில் எப்படியும் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தபடி செயல்படும் ஆலிம்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் ஆலிம்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே! (35:28)
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள் ஆலிம்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் இந்த திருமறை வசனத்தின் படி மாரக்கத்தில் விளையாடி தங்கள் மனோ இச்சைப்படி தீர்ப்பு சொல்லும் இவர்கள் மார்க்க அறிஞர்களா? ஆலிம்களாக இருப்பதற்கு தகுதி படைத்தவர்களா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
8.கேள்வி : "அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 901 .



ஆனால் தௌஹீத் பள்ளிகளில் ஜுமுஆவின் பொது பெண்களை அழைத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் தொழுதால் அவர்களுக்கு சுன்னத் தொழுகை போல் ஆகுமா?.

பதில்:

பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும்.

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

நூல் : அபூதாவுத் (901)

பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சிலர் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தானதர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று கூறுவார்களா?

மாறாக இது சலுகை என்றும் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள்.

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

நான் வெள்ளிக்கிழமை அன்று "காஃப் வல்குர்ஆனில் மஜீத்' எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி

நூல் : முஸ்லிம் (1580)

பொதுவாக ஜும்ஆத் தொழுகையைப் பள்ளியில் தான் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்று கூறினார்கள்.

பெண்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தால் ஜும்ஆத் தொழுகையே லுஹருக்கு பதிலாக போதுமானதாகும். வீட்டில் தொழுதால் லுஹர் தொழுகை அவர்களுக்குக் கடமையாகும். பள்ளிக்கு வருகின்ற விசயத்தில் தான் பெண்களுக்குச் சலுகை உள்ளது. ஜும்ஆ என்ற தொழுகை லுஹர் தொழுகைக்குப் பகரமாக தரப்பட்டுள்ளதால் ஜும்ஆ தொழுகையை பெண்கள் நிரைவேற்றினால் அவர்கள் லுஹர் தொழக் கூடாது.

அவர்கள் தாமாக விரும்பி ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டால் அவர்கள் கடமையைத் தான் நிறைவேற்றுகிறார்கள். இதை சுன்னத்தான தொழுகை என்று சொல்ல முடியாது.

பெண்களைப் போன்று நோயாளிகளுக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இந்தச் சலுகையைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு வந்து ஜும்ஆத் தொழுதால் அது கடமையான தொழுகை இல்லை என்று கூற மாட்டோம். மாறாக அவர் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்றே கூறுவோம்.

இதேப் போன்று பயணத்தில் இருப்பவர் பள்ளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு பயணி பள்ளிக்கு வந்து ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றவில்லை என்று கூறமாட்டோம். பெண்கள் ஜும்ஆத் தொழுவதும் இது போன்றதாகும்.
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
7.கேள்வி : மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது?



நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருக்கும் போதும், மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

பதில்

சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

1373حَدَّثَنِي أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَمَّارٍ وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ عِكْرِمَةُ وَلَقِيَ شَدَّادٌ أَبَا أُمَامَةَ وَوَاثِلَةَ وَصَحِبَ أَنَسًا إِلَى الشَّامِ وَأَثْنَى عَلَيْهِ فَضْلًا وَخَيْرًا عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ عَمْرُو بْنُ عَبَسَةَ السُّلَمِيُّ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي عَمَّا عَلَّمَكَ اللَّهُ وَأَجْهَلُهُ أَخْبِرْنِي عَنْ الصَّلَاةِ قَالَ صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ فَإِنَّ حِينَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ فَإِذَا أَقْبَلَ الْفَيْءُ فَصَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ أَقْصِرْ عَنْ الصَّلَاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ قَالَ رواه مسلم

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போது தான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர். அதன் பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக் கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். அப்போது முதல் ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் வரை (நண்பகல் வரை) தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரை தொழுங்கள். பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுங்கள்! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா (ரலி)

நூல் : முஸ்லிம் (1512)

இறை மறுப்பாளர்கள் இந்த நேரங்களில் சூரியனுக்கு சஜ்தாச் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நேரத்தில் நாம் தொழுதால் நாமும் சூரியனுக்கு சஜ்தா செய்வதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இறை மறுப்பாளர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த மூன்று நேரங்களில் தொழுவதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதே நேரங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்ய எந்தத் தடையுமில்லை.

எனவே இந்தச் செய்தியில் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கலாம் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை.
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
6.கேள்வி : தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?



தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்?

பதில்

இரவில் இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர். இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும். இதனால் இரவுத் தொழுகைக்கு வித்ரு என்ற பெயரும் உள்ளது.

இதே தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் (இரவின் கடைசிப் பகுதியில் நிறைவேற்றப்படும் தொழுகை) என்று சொல்லப்படுகின்றது. தஹஜ்ஜத் தொழுகையில் நேரம் மட்டுமே வேறுபடும். தொழும் முறையில் வேறுபாடு இல்லை.

473 حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلَاةُ اللَّيْلِ فَقَالَ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْت رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் அமர்ந்துகொண்டிருந்த மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, "இரவுத் தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத் தொழுகையை (அதன் நேரம் நுழைந்து விட்டது பற்றி) நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்'' என்றார்கள்.

நூல் : புகாரி (473)

இரவில் மற்ற நேரங்களில் தொழுவதை விட இரவின் இறுதியில் தொழுவது அதிக சிறப்பு வாய்ந்தது.

1145 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (1145)

இந்தத் தொழுகையில் குறிப்பிட்ட சூராக்களை மட்டும் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. குர்ஆனில் உள்ள சூராக்களில் எதை வேண்டுமானாலும் ஓதிக்கொள்ளலாம்.

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا (20)73

குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.

அல்குர்ஆன் (73 : 20)

தஹஜ்ஜுத் பற்றி முழுமையாக அறிய

http://onlinepj.com/books/tharaaveeh-oor-aayvu/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/tharaveeh_thahajuth_vithr/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thahajud_neram_ethu/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thraveeh_thahajud_onra/
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
5.கேள்வி : மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?



மழை நேரத்தில் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை சேர்த்து தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா?

பதில்

உள்ளூரில் இருந்தாலும் மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்.

1151و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ كِلَاهُمَا عَنْ الْأَعْمَشِ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ فِي حَدِيثِ وَكِيعٍ قَالَ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَيْ لَا يُحْرِجَ أُمَّتَهُ وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ قِيلَ لِابْنِ عَبَّاسٍ مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَه رواه مسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (1272)

மதீனாவில் இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை, அச்சம் போன்ற காரணங்கள் இல்லாமல் சாதாரண சூழ்நிலை உள்ளபோது தொழுகையைச் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். இதை ஆதாரமாக்க் கொண்டு இதை நாம் வழக்கமாக்கி தினமும் ஜம்மு செய்து தொழக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வழமையாகச் செய்யவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இது எப்படி அரிதாக நடந்த்தோ அது போல் நாமும் அரிதாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழை அச்சம் போன்ற காரணம் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்மு செய்திருக்கும் போது மழை அச்சம் கலவரம் போன்ற நேரங்களில் தாராளமாக இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழை, அச்சம் போன்ற காரணங்கள் இருக்கும் போது இந்தச் சலுகையை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை இந்த செய்தி கொடுக்கின்றது.

போரில் எதிரிகள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் தொழுகைகைள சேர்த்துத் தொழுவதை மார்க்கம் அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஹதீஸில் எதிரிகளின் பயத்துடன் மழையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. மழை நேரத்திலும் இந்த அனுமதி உண்டு என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

666 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ رواه البخاري

குüரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு "ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்'' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், "(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் "ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்'' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்'' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (666)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம்.
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
4.கேள்வி : தொடர் உதிரப்போக்குள்ளவர் தொழுவது எப்படி




மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

பதில்

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 228

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு அதையே மாதவிடாயாகக் கொள்ள வேண்டும். அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது.

குளிப்பது கட்டாயமில்லை என்றாலும் தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது (அதற்காக குளியல் கடமை இல்லாவிட்டாலும் நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக்கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்தநாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.

நூல் புகாரி (327)

தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

நூல்: புகாரி 2037

சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
3.கேள்வி : அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?



அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமா? தொப்பி போடாமல் தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா?

பதில்:

எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக் கூடாது என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு மார்க்கம் கூறும் அளவுகோல் எந்த பள்ளிகளுக்குப் பொருந்துகிறதோ அந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது.

நம்முடைய பகுதியில் மார்க்கம் அங்கீகரித்த பள்ளிவாசல்கள் இருந்தால் அங்கு சென்று தொழுகையை நிறைவேற்ற முடியும். கடமையான தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்றுவது இந்தச் சூழ்நிலையில் தான் நம் மீது கடமையாகும்.

நம் பகுதியில் பள்ளிவாசல்கள் எதுவும் இல்லாவிட்டால் அல்லது தொழ தடைசெய்யப்பட்ட பள்ளிகள் மட்டும் இருந்தால் இது கடமையான தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையாகும். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.

இவர்கள் பள்ளியில் தொழ வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. எண்ணத்திற்கு நற்கூலி வழங்கப்படும் என்ற அடிப்படையில் பள்ளியில் தொழுத நன்மை இவர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் அனுமதிக்ப்பட்ட பள்ளிவாசல்கள் இல்லை என்பதைக் காரணமாகக் கூறிக்கொண்டு தடைசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று விடக்கூடாது.

மார்க்கம் தடைசெய்த காரியத்தைச் செய்து நன்மையைச் சம்பாதிக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்தச் செயலுக்கு நன்மை கிடைக்காததோடு மார்க்க வரம்பை மீறிய குற்றம் ஏற்படும்.

ஒருவர் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தவருடைய செல்வத்தைத் திருடி தர்மம் செய்தால் இவர் நன்மை செய்தவராக மாட்டார். திருட்டுக் குற்றத்தைச் செய்த பாவியாகி விடுவார்.

எனவே மார்க்க உத்தரவுகளை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் தடை செய்த விஷயங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட வேண்டும்.

7288 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7288)

தொழக்கூடாத பள்ளிவாசல் குறித்து அறிந்திட

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/thozakuutatha_pallivasal/

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/shrkana_palliyi_thozalama/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thozakudatha_palli_undaa/


சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
2.கேள்வி : கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா



ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா?

தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்?

பதில்

கடமையான தொழுகையை ஆண்கள் பள்ளியில் நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது மட்டும் ஆண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம்.

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/veettil_jamathaka_thozuthal/

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடமையான தொழுகையை கூட்டாகத் தொழலாம். ஆனால் மனைவி கணவனுடன் சேர்ந்து நிற்காமல் கணவனுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும்.

மனைவியானாலும், தாயானாலும் அவர்கள் தொழுகையில் ஆண்களுக்கு அருகில் நிற்கக்கூடாது. ஆண்களுக்குப் பின்னால் தனி அணியில் நிற்க வேண்டும். பின்வரும் செய்திகளிலிருந்து இதை அறியலாம்.

1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول الله صلى الله عليه و سلم فصلى عليه في منزلهم فتقدم رسول الله صلى الله عليه و سلم و كان أبو طلحة وراءه و أم سليم وراء أبي طلحة و لم يكن معهم غيرهم رواه الحاكم

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் துôதர் (ஸல்) அவர்கள் முன்னாலும், அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும் நின்றார்கள். அபூதல்ஹா (ரலி)க்குப் பின்னால் அவர்களது மனைவி உம்மு சுலைம் (ரலி) (வரிசையாக ) நின்று இருந்தார்கள். இவர்களுடன் வேறு யாரும் இல்லை.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அபிதல்ஹா

நூல்: ஹாகிம் (1350)

அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் கணவனாக இருந்தாலும் தொழுகையில் இருவரும் அருகருகே நிற்கவில்லை. மாறாக தொழுகையில் ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்க வேண்டும் என்ற பொதுவான ஒழுங்கு முறையைத் தான் கடைபிடித்துள்ளார்கள்.

தாயும் மகனும் சேர்ந்து தொழும் போதும் இந்த முறைப்படித் தான் தொழுகையில் நிற்க வேண்டும்.

380حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدْ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ وَالْيَتِيمَ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன்'' என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய ஒரு பாயை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அத நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

நூல் : புகாரி (380)

727حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِسْحَاقَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.

நூல் : புகாரி (727)
சம்மாந்துறை TJ

தொழுகை சம்பந்தமான கேள்வி பதில்.

0 comments
1.கேள்வி : ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா? 



ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? அது தவ்று என்றால் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவும்.

பதில்

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன் பிறகு சஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். சஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிது நேர நிலையின் போது கைகளைத் தொங்கவிட வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் தற்காலத்தில் வந்தவரான அப்துல்லாஹ் பின் பாஸ் என்ற அறிஞர் இந்த நிலையில் கைகைள கீழே தொங்கவிடாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவூதி அரசாங்கத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இதை சவூதி மக்களில் கனிசமானவர்கள் பின்பற்றுகின்றனர். விடுபட்ட நபிவழி என்ற பெயரில் தமிழ் உட்பட பல மொழிகளில் கோடிக்கணக்கான இலவச புத்தகத்தை அச்சிட்டு சவூதி அரசாங்கத்தின் மூலம் வினியோகம் செய்தனர். ஜாக் இயக்கத்துக்கும் தமிழில் இந்த நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் 1990ஆம் ஆண்டு சவூதி மூலம் அனுப்பப்பட்டன. ஆனால் ஜாக் இயக்கம் இவற்றை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டதால் தமிழகத்தில் இது அவ்வளவாக பரவவில்லை.

இந்தக் கூற்றுக்கு ஏற்கத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் யார் கூறினாலும் அதைக் கடைப்பிடிப்பது ஒரு முஃமினுடைய கடமை. ஆனால் இந்தச் சட்டத்தை கூறிய இவரும் இவரைப் பின்பற்றி இச்சட்டத்தைக் கூறுபவர்களும் தொழுகை பற்றி வந்துள்ள அனைத்து நபிமொழிகளையும் சரியாக ஆராயவில்லை. ஒரு நபிமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டதின் அடிப்படையில் இப்படிப்பட்ட தவறான சட்டத்தை மக்களிடம் வைத்துள்ளனர்.

ருகூவுக்கு பிறகுள்ள நிலையில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்ற கருத்தில் நேரடியாக ஒரு நபிமொழி கூட இல்லை. இவர்கள் இந்த வாதத்திற்கு பின்வரும் நபிமொழியை மட்டுமே ஆதாரம் காட்டுகின்றனர்.

877أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ الْعَنْبَرِيِّ وَقَيْسِ بْنِ سُلَيْمٍ الْعَنْبَرِيِّ قَالَا حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ وَائِلٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : நஸாயீ (877)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் வலது கையை இடது கையின் மீது வைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ருகூவுக்குப் பிறகு நிலைக்கு வருவதால் இந்தப் பொதுவான ஹதீஸ் அடிப்படையில் இந்த நிலையிலும் கைகளைக் கட்ட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

நிற்குதல் என்பது தொழுகையை ஆரம்பித்டவுடன் நிற்பதைத் தான் குறிக்கும் என்பதை இவர்கள் விளங்காததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

10087حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ تَرَكَ النَّاسُ ثَلَاثَةً مِمَّا كَانَ يَعْمَلُ بِهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا ثُمَّ سَكَتَ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيَّةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் கைகளை உயர்த்துவார்கள். பிறகு ஓதுவதை ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மது (10087)

நிற்கும் போது கைகளைக் கட்டிக் கொள்வார்கள் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் ருகூவுக்குப் பிறகு நிற்கும் போதும் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இவர்களின் வாதப்படி மேற்கண்ட ஹதீஸையும் புரிந்து கொள்வார்களா? அதாவது ருகூவில் இருந்து எழுந்து நிற்கும் போது அதில் குர்ஆன் ஓதுவார்களா?

இந்த ஹதீஸிலும் நின்றால் என்று பொதுவாகத் தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை ருகூவைக் குறிக்காது. குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையை மட்டுமே குறிக்கும் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

வலது கையை இடது கையின் மீது வைத்து கைகட்டுவது தொடர்பாக வரும் நபிமொழியைப் படித்தால் இந்த செயலை குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் செய்ய வேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் செய்யக் கூடாது என்பதை தெளிவாக அறியலாம்.

608حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ وَمَوْلًى لَهُمْ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَصَفَ هَمَّامٌ حِيَالَ أُذُنَيْهِ ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنْ الثَّوْبِ ثُمَّ رَفَعَهُمَا ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَلَمَّا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ فَلَمَّا سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ رواه مسلم

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன். பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் "ருகூஉ'ச் செய்ய விரும்பியபோது தம் கைகளை ஆடையிலிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிரும் போது) "சமிஅல்லாஹு லிலிமன் ஹமிதஹ்' என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தாச் செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(களை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) சஜ்தாச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 671

இந்த நபிமொழி தொழும் முறையை விவரிக்கின்றது. வலது கையை இடது கையின் மீது எப்போது வைக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விவரிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் முதல் நிலையில் தான் கைகளைக் கட்டிய நிலையில் நின்றுள்ளார்கள். இதே செய்தி ருகூவுக்குப் பிறகுள்ள நிலையைப் பற்றியும் பேசுகின்றது. ஆனால் இங்கே நபி (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டினார்கள் என்று கூறப்படவில்லை.

எனவே குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் தான் கைகளை கட்ட வேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளை கட்டாமல் தொங்க விட வேண்டும். இது தான் நபிவழி. இதற்கு மாற்றமாக ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளை கட்டினால் அது நபியவர்கள் செய்துகாட்டிய தொழுகைக்கு மாற்றமான பித்அத்தான செயலாகும்.
சம்மாந்துறை TJ

போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?

0 comments

pop

போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குரான் மட்டும் அல்ல , 1500 வருடங்களாக துர்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள் அராமிக் என்னும் மொழியில் உள்ளன அதை வாடிகன் நகரத்துக்கு தெரியபடுதபட்டுள்ளது , அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
அதில் நபி (ஸல்) அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது , அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் அவருக்கு ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம்.
இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது.

சம்மாந்துறை TJ

சம்மாந்துறை கிளை சார்பாக புரஜெக்டர் மூலமான மார்க்கப் பிரச்சாரம்

0 comments
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு அருகாமையில் 2013.01.31 அன்று இரவு 7.45 மணியளவில் புரஜெக்டர் மூலமாக சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய கேள்வி பதில் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…!Photo1233Photo1238Photo1239
சம்மாந்துறை TJ

சம்மாந்துறையில் விடாது தொடரும் தெருமுனை பிரச்சாரம்

0 comments
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 29.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சாலி வீதி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. அதில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ‘இஸ்லாத்தை பின்பற்றா இஸ்லாமிய சமூகம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்…!
Photo1222yyyyPhoto1225y

சம்மாந்துறை TJ

SLTJ சம்மாந்துறை கிளையில் திருச்சி விவாத ஒளிபாரப்பு இடம்பெற்றது

0 comments
திருச்சியில் பீ ஜைனுல் ஆபிதீன் மற்றும் சைபுதீன் ரஷாதி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விவாதம் SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் மூன்று நாட்களும் தொடராக ஒளிபரப்பப்பட்டது இவ் விவாதத்தை கொள்கை சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பார்த்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்..!

சம்மாந்துறை TJ