பாடம் 01 :ஹதீஸ் என்றால் என்ன?
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் அன்னாரது செற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் யாவும் ஹதீஸ் எனப்படும்.
ஹதீஸின் இரு முக்கிய பகுதிகள்
எப்போதுமே ஒரு ஹதீஸ் பின்வரும் இரு முக்கிய பகுதிகளை கொண்டிருக்கும், கொண்டிருக்க வேண்டும்.
1.அறிவிப்பாளர் வரிசை
2.மூல வாக்கியம்.
இதற்கான உதாரனமாக பொதுவாக நாம் எல்லோரும் அறிந்திருக்கின்ற சுத்தம் ஈமானில் பாதியாகும் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
மேற்படி நபி (ஸல) அவர்களது கூற்றை நாம் பொதுவாக ஹதீஸ் எனக் குறிப்பிட்டாலும் இது ஹதீஸின் இரண்டாம் பகுதியன மூல வாக்கியம் மாத்திரமே.
எனினும் இவ்வாறான மூல வாக்கியங்களை எந்ந நூலாசிரியர் அல்லது எந்தெந்த நூலாசிரியர்கள் தங்களது ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்துள்ளார்கள் என்பதை வைத்து அதன் அறிவிப்பாளர் வரிசையை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரனமாக மேற்படி மூல வாக்கியம் ஸஹீஹ் முஸ்லிம் என்ற கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளது. எனினும் நபி (ஸல்) அவர்களோ ஹிஜ்ரி 12 இல் மரணித்திருக்க ஹிஜ்ரி 200 களின் ஆரம்பத்தில் வாழ்ந்த இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்களால் நபி (ஸல்) அவர்கள் மேற்படி வார்த்தையை கூறினார்கள் என்பதை எவ்வாறு பதிவு செய்ய முடியும் ?; என்ற ஒரு அறிவுபூர்வமான கேள்வியை நாம் இந்த இடத்தில் எழுப்புவோமானால் இக்கேள்விக்கான பதில்தான் அறிவிப்பாளர் வரிசை என்பதாகும். எனவே மேற்படி மூல வாக்கியத்தனி அறிவிப்பாளர் வரிசை பின்வருமாறு அமைந்துள்ளது.
01.இமாம் முஸ்லிம் (றஹ்) மரணித்த ஆண்டு ஹிஜ்ரி 261
02.இஸ்ஹாக் மரணித்த ஆண்டு ஹிஜ்ரி 251
03.ஹப்பான் மரணித்த ஆண்டு ஹிஜ்ரி 216
04.அபான் மரணித்த ஆண்டு ஹிஜ்ரி சுமார் 160
05.யஹ்யா மரணித்த ஆண்டு ஹிஜ்ரி 132
06.ஸைத் (இளைய தாபிஈன்கள் காலப்பகுதியில் வாழ்தவர்)
07.அபூ ஸல்லாம் (தாபிஈ)
08அபூ மாலிக் அல் அஷ்அரி (றழி) .(நபித் தோழர்)
09.நபி (ஸல்) அவர்கள்.
எனவே மேற்படி அறிவிப்பாளர் வரிசை சுத்தம் ஈமானில் பாதியாகும் என்ற ஹதீஸை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது ஆசிரியரான இஸ்ஹாக் என்பவரிடம் இருந்தும் இஸ்ஹாக் என்பவர் தனது ஆசிரியரான ஹப்பான் என்பவரிடம் இருந்தும் ஹப்பான் எனபவர் தனது ஆசிரியரான அபான் என்பவரிடம் இருந்தும் அபான் என்பவர் தனது ஆசிரியரான யஹ்யா என்பவரிடம் இருந்தும் யஹ்யா என்பவர் தனது ஆசிரியரான ஸைத் என்பவரிடம் இருந்தும் ஸைத் என்பவர் தனது ஆசிரியரான அபூ ஸல்லாம் எனப்வரிடம் இருந்தும் அபூ ஸலாம் என்பவர் தனது ஆசிரியரான .(நபித் தோழர்) அபூ மாலிக் அல் அஷ்அரி (றழி) அவர்களிடம் இருந்தும் அபூ மாலிக் அல் அஷ்அரி (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்டதை தெளிவு படுத்துகின்றது.
இவ்வாறுதான் நபி (ஸல) அவர்களது மரனத்திற்குப் பின் ஹிஜ்ரி இருநூறிலோ முந்நூறிலோ வாழ்ந்த ஹதீஸ் நூலா சிரியர்கள் தாங்கள் எந்த அறிவிப்பாளர் வரிசை மூலம் குறித்த ஒரு ஹதீஸை பெற்றுக் கொண்டோம் என்பதை தெளிவுபடுத்தியிருப்பதை காண்கின்றோம்.
எனவே ஹதீஸ் என்பது வெறுமனே நபி (ஸல்) அவர்கள் தொடர்பான மூல வார்த்தை மாத்திரம் அல்ல, அதற்கு ஒரு அறிவிப்பாளர் வரிசையும் இருப்பது அவசியம் என்பதை இப்பாடத்தினூடாக நாம் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
எனினும் ஹதீஸ் என்று கூறப்படும் சில கூற்றுகளுக்கு எந்ந ஒரு ஹதீஸ் கிரந்தத்திலும் இல்லாமலிருந்தால் அதை அடிப்படை இல்லாத ஹதீஸ்!! என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.
உதாரனமாக முஸ்லிம் சமூகத்தில் குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் ஒற்றுமை வருவதை விரும்பாத சில இயக்கவாதிகள் அடிக்கடி முழங்கிவரும் எனது சமுதாயத்தின் கருத்து முரன்பாடு றஹ்மத் ஆகும் என்ற ஹதீஸை!! குறிப்பிடலாம்.
எனவே இது போன்ற அடிப்படையில்லாத கூற்றுகள் அறிவுள்ள எந்த முஸ்லிமிடமும் நபியவர்களின் கூற்றாக மாறிவிடாது என்பதை இங்கு பெரிதாக விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஆகவே ஹதீஸ் என்பது அறிவிப்பாளர் வரிசை, மூல வாக்கியம் என இரு பகுதிளால் ஆனது என்பதை இப்பாடத்தில் விளங்கிக் கொண்ட நாம் இவ்விரு பகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு பல வகைகளாக பிரித்து நோக்குவது என்பதை இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் பாடங்களில் நோக்குவோம்.
Popular Posts
பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற
STRsms News
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக