
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்யின் தெருமுனை பிரச்சாரம் சம்மாந்துறை சென்னால் கிராமம் பகுதியில் 2013.01.23 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சகோதரர் ரசான் DISc அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது சில தப்லீக் சகோதரர்கள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ரியால் என்பவருடன் வந்து இந்த பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது உடனடியாக பிரச்சாரத்தை நிறுத்துமாறும் அனாகரியமான முறையில் நடந்து கொண்டதுடன் கைகலப்புக்கும் தயாரானார்கள் எனினும் நமது சகோதர்கள் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபடாமல் ஜமாஅத் சார்பாக பேசுவதற்க்கு ஒருவரை நியமித்து அவர்கள் சார்பாக ஒருவரை பேச அழைத்த போது பேசுவதற்க்கு வர மறுத்தனர் இதனை புரிந்து கொண்ட அப்பிரதேச மக்கள் அசத்திய வாதிகளை இனங்கண்டு அந்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதுடன் பிரச்சாரத்தை தொடருமாறும் கோரிக்கை விடுத்தனர் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற்றது.
பின்னர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் ஜமாஅத்யின் அறிமுகம் மற்றும் அதன் பணிகள் பற்றி தெளிவுரை வழங்கினார் எனினும் இதனை சகித்துக்கொள்ள முடியாத அசத்தியவாதிகள் போலீசாரை வரவழைத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்துக்கு வந்து பார்த்த போது பிரச்சாரம் எந்தவிதத்திலும் பாதைகளுக்கோ பொதுமக்களுக்கோ இடையூறின்றி இடம்
பெருவதை அவதானித்தா அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது என்று அசத்தியவாதிகளுடன் கூறிவிட்டு சென்றனர்.
போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்துக்கு வந்து பார்த்த போது பிரச்சாரம் எந்தவிதத்திலும் பாதைகளுக்கோ பொதுமக்களுக்கோ இடையூறின்றி இடம்
பெருவதை அவதானித்தா அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது என்று அசத்தியவாதிகளுடன் கூறிவிட்டு சென்றனர்.
10 மணி அளவில் முடிவுற இருந்த பிரச்சாரம் 11 மணி அளவில் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
வீடியோ மற்றும் மேலதிக புகைப்படங்கள் விரைவில் இன்ஷாஅல்லாஹ்...
சம்மாந்துறை TJ


0 comments:
கருத்துரையிடுக